தங்கத்தின் விலை உச்சம் அடைந்து வந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் விலை குறைய தொடங்கி இருப்பதால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. இதன் தங்கம் வாங்குபவர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உச்சம் அடைந்து வந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் விலை குறைய தொடங்கி இருப்பதால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
22 காரட் தங்கத்தின் விலை நிலவரம்
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,510 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 240 ரூபாய் சரிந்து 44,080 ரூபாயாக உள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை நிலவரம்
24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் சரிந்து 6,027 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை 48,216 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை சரிந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் சரிந்து ரூ.75.70 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் சரிந்து 75,700 ரூபாயாக உள்ளது.
Source : economictimes.com